2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவு

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
, வி.சுகிர்தகுமார் 

இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் பலூன் விடும் நிகழ்வு  மட்டக்களப்பு நகரில் இன்று சனிக்கிழமை (16)  இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்தரக் கிளையின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் திருமலை வீதியூடாக இலங்கை போக்குவரத்துச் சாலை வரை சென்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் முடிவடைந்நது.

 இதன்போது 1000 ரூபாவிற்கான காசோலை இணைக்கப்பட்ட 250 பலூன்கள் இந்துக்கல்லூரி மைதானத்தில்  பறக்கவிடப்பட்டன. இந்த காசோலைகளை பெறுபவர்கள் அருகிலுள்ள கிளையில் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேற்தரக் கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் எம். ஐ. நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் கே. பி. ஆனந்த நடேசன், திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களின் பிராந்திய முகாமையாளர்கள், மட்டக்களப்பு மேற்தரக் கிளையின் உதவி முகாமையாளர் கே. சாமித்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X