2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

செங்கலடியில் 8 மோட்டார் குண்டுகள் மீட்பு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில் எட்டு மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மணியளவில் இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இராணுவ குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்களைக் கொண்டு இவற்றை செயலிழக்கச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
செங்கலடி - பதுளை வீதி கறுப்புப் பாலத்தடியில் நீண்ட காலமாக அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடி அமைந்திருந்த பகுதியிலேயே இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இவை பழைய குண்டுகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X