2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வறட்சியினால் 99 வீதம் பாதிப்பு: குபேரன்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் 99 வீதம் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக போரதீவுப் பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.குபேரன் கூறினார்.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடி நீர் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச சபையின் செயலாளரிடம் இன்று செவ்வாய்க்கிழமை (12) கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

போரதீவுப் பற்றுப் பிரதேச மக்களுக்குரிய குடிநீரினை போரதீவுப்பற்று பிரதேச சபையின் 4 வவுசர்கள் மூலம் நாளாந்தம் 60,000 லீட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. தம்பலவத்தை, மற்றும் களுதாவளை போன்ற இடங்களிலிருந்தே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன.

கிராம மக்களுக்கு மாத்திரமின்றி பிரதேசத்தில் காணப்படுகின்ற பாடசாலைகள், வைத்தியாசலைகள், போன்றவற்றுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் தம்மிடம் இருக்கின்ற நீர்த் தாங்கிகள் போதாதுள்ளதாகவும் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் மற்றும் தனவந்தர்களிடமிருந்தும் தன்ணீர் தங்கிகளை எதிர்பார்ப்பதாகவும், போரதீவுப் பற்று பிரதேச சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X