2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

05 குடிநீர்த் தாங்கிகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின்; கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   ரெதீதென்ன மற்றும் ஜெயந்தியாய கிராமங்கள்  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கிராமங்களில் வாழும் 350 குடும்பங்களுக்கும் பாடசாலைக்கும் குடிநீர்  விநியோகத்தை மேற்கொள்வதற்காக குடிநீர்த் தாங்கிகள் நேற்று வியாழக்கிழமை  வழங்கப்பட்டன.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தால் 1,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட 5 குடிநீர்த் தாங்கிகளை பிரதேச செயலாளர் வி.நிஹாறாவிடம் கையளித்ததாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

பிரதேச சபை மற்றும் படையினரின் உதவியுடன் உழவு இயந்திர பவுஸர்கள் மூலம் குடிநீரை எடுத்துவந்து குடிநீர் விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதேச சபையுடன் இணைந்து இடர் முகாமைத்துவப் பிரிவு குடிநீர் விநியோகத்துக்கான  ஏற்பாடுகளைச் செய்கின்ற அதேவேளை, இதற்கான செலவுகளில் ஒரு பகுதியை படையினரும் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X