2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

10 பேருக்கு நீரிறைக்கும் இயந்திரங்கள்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 05 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

வாகரை, மாங்கேணியில் இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபடும் 10 பேருக்கு, சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீரிறைக்கும் இயந்திரங்கள்  இன்று  வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தலைவியாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான  அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில், இவை வழங்கப்பட்டுள்ளன.

மாங்கேணியில் நீண்டகாலமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை இழந்த 23 பேர்,  இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய 13 பேருக்கும் நீரிறைக்கும் இயந்திரங்கள் விரைவில் வழங்கப்படும் என, மட்டக்களப்பு மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மேலும், சந்தை வாய்ப்பை  ஏற்படுத்துதல், வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில்  மாங்கேணியில் விற்பனை நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X