2025 மே 06, செவ்வாய்க்கிழமை

12 வர்த்தகர்கள் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில், நேற்று (16) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருள்களை விற்பனைச் செய்த குற்றச்சாட்டில், 12 வர்த்தகர்களைக் கைதுசெய்துள்ளதாக, கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

ஒட்டமாவடி நகரம், வாழைச்சேனை, மிராவோடை, கறுவாக்கேணி, மற்றும் கிரான் ஆகிய நகரங்களில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசியைக் கட்டுப்பாட்டு விலையையும் மீறி விற்பனை செய்த வர்த்தகர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன், பொருள்கள் பறிமுதல் சொய்யப்பட்டுள்ளன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X