Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, 125 பவுண் தங்க நகைகளும் 1 இலட்சம் ரூபாய் இலங்கைப் பணமும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (05) இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூன்று பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளர்கள், நேற்று மாலை வேலை நிமித்தம் வெளியில் சென்ற சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த 3 நபர்கள் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் சம்பவம் இடம்பெற்ற வேளை, வீட்டின் கதவை உடைத்து சந்தேகம் ஏற்படாதவாறு வீட்டினுள்ளும் வெளிப்பகுதியிலும் அதிகளவிலான மிளகாய்த் தூள்களைத் தூவி அங்கிருந்த காவல் நாயின் கவனத்தை திசை திருப்பி திரைப்படப் பாணியில் இக்கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள், வீட்டின் உரிமையாளர்கள் வரமுன் வாடகைக்கு இருந்த அறைகளைப் பூட்டி விட்டு கொள்ளையிடப்பட்ட நகைகளுடன் தலைமறைவாகியுள்ளனர்.
அதன் பின்னர், வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட காத்தான்குடிப் பொலிஸார் சந்தேகநபர்களை வாகரையில் வைத்து கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகைகள் சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago