2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

13,000 மீனவக் குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் 13,000 மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில்  இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வரட்சி காரணமாக வாவி மீன்பிடியை நம்பியுள்ள 11,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாவி மீன்பிடித்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மீன்களை பிடிப்பதற்காக வாவியில் வலை வீசும்போது  பாசிகளே படுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X