2025 மே 03, சனிக்கிழமை

15வது ஆண்டு நிறைவு விழா

Kanagaraj   / 2014 மே 15 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கத்தினால் நடாத்தப்படும் செவிப்புலனற்ற சிறுவர்களுக்கான வாழ்வோசைப் பாடசாலையின் 15வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தூய காணிக்கை அன்னை தேவாலயத்தில் நன்றி நவிலல் வழிபாடு புதன்கிழமை(14) நடைபெற்றது.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி டி.டி.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

செவிப்புலனற்ற சிறுவர்களுக்கான வாழ்வோசைப் பாடசாலையின் அதிபர் திருமதி.சி.எஸ்.டேவிட், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இயக்குனர் சபையின் அங்கத்தவர்கள் மற்றும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X