Freelancer / 2022 மே 30 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை - ஓட்டமாவடி, மீராவோடை புளியடித்துறை ஆற்றில் நீராடச் சென்ற 16 வயது மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை (29) இடம்பெற்றுள்ளது.
மீராவோடை - அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் எம்.எச்.அர்ஹம் எனும் மாணவன் நண்பர்களோடு சேர்ந்து நீராடும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago