2025 மே 01, வியாழக்கிழமை

2 குளங்களின் வான் கதவுகள் திறப்பு

Super User   / 2014 ஜனவரி 16 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தற்போது பெய்து வரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை மற்றும் உறுகாமம் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.டி.மோகனராஜ் தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டு நான்கு அங்குலத்துக்கு நீர் பாய்வதாகவும், உறுகாமம் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன் இந்த குளத்திலிருந்து 28 அங்குலத்துக்கு நீர் பாய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இக்குளங்களில் இருந்து பாயும் நீர் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சித்தாண்டி மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

இதனால் தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்லுமாறும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் முந்தனையாறு பெருக்கெடுத்துள்ளதாலும் அந்த பகுதியை அன்மித்த தாழ் நிழ பிரதேசத்தில் வெள்ள அபயாம் ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று காலை எட்டு மணியிலிருந்து இன்று காலை வரைக்கும் 30 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி கே.சிவதாஸ் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .