2025 மே 01, வியாழக்கிழமை

2 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றல்

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பிலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு டிரக் வண்டியில் சட்டவிரோதமாக ஏற்றிச்செல்லப்பட்ட 2 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) காலை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மணற்பிட்டி, அம்பிளாந்துறை ஆகிய இடங்களில் வைத்து மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீதிச் சோதனையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளையும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .