2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் கைது

Super User   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், ஜிப்ரான்)

கிழக்கு  பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ரீ.கிருஸ்ணகாந் நேற்று திங்கட்கிழமை  இரவு மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் ரீ.மதன்ராஜ் களுவாஞ்சிக்குடியில் வைத்து நேற்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சார்சையால் மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொலிஸாரை அகற்றுமாறு கோரி நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையடுத்து  பல்கலைக்கழகம் கால வரையறை இன்றி மூடப்பட்டது.

இன்று கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப் படவுள்ள நிலையில் மாணவர் ஒன்றியத் தலைவர் ரீ.கிருஸ்ணகாந்த் கையொப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கை ஊடாக மாணவர் ஒன்றியம் அறிவிக்கும் வரை விரிவுரைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என்று கூறியிறுந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு மாணவர்களை சமுகமளிக்க வேண்டாம் என பத்திரிகைகளில் தெரிவித்ததுடன் மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தி அமைதிக்கு பங்கம் விளைவிக்கலாம் என்பதாலேயே அவர்களை கைது செய்ததாகவும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .