2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கதிர்காமம் வாவியில் மூழ்கிய மட்டு. மாணவனின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்,கே.எஸ்.வதனகுமார்)

கதிர்காமம் வாவியில் பலியான மாணவனின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் கதிர்காமம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது மரண விசாரணை நடைபெறுவதுடன்,  விசாரணை முடிந்தவுடன் சடலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்படுமெனவும் மட்டக்களப்பு வவுணதீவு நாமகள் மகா வித்தியாலய அதிபர் அதிபர் ரி.கோபாலப்பிள்ளை தெரிவித்தார்.

குறித்த பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபருடன்   நான்கு நாள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், குறித்த மாணவன் கதிர்காமம் வாவியில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரினால் அடித்துச் செல்லப்பட்டு மரணமாகியுள்ளான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .