Super User / 2011 மே 18 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
காத்தான்குடியில் காணாமல் போன கர்ப்பிணி பெண்ணொருவர் அவரின் வீட்டு வளவிற்குளிருந்து இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சடலம் சட்ட வைத்திய அதிகாரி எம்.ஐ.ஏ.றஹ்மான் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
இறந்த பெண் ஐந்து மாத கர்ப்பிணியான புகாரி றிஸ்வியா என அவரின் தாய் அடையாளம் காட்டினார். குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளது.
இதேவேளை, அப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago