2025 ஜூலை 12, சனிக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கண்டலடி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய குடும்பஸத்தர் ஒருவரை வாகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோமத்தலா மடு எனும் இடத்தில் 13 வயதுடைய சிறுமியொருவரை இரவு வேளையில் பலாத்காரமாக கடத்தி  சென்று  அருகிலுள்ள காட்டு பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்;சித்துள்ளார் என்று இவர் மீத சந்தேகிப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் வாழைச்சேனை நீதிவான்       நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தினம் இவர் அடையாள அணி வகுப்பிற்க்கு உட்படுத்தப்படவிருப்பதால் பாதிக்கப்பட்ட சிறுமியையும் நீதிமன்றத்தில் ஆஜராகும் படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .