2021 மே 11, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கட்டுமுறிவு கிராம மக்களுக்கு அடிப்படை முதலுதவி பயிற்சி

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

வெள்ளத்தினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ள வாகரை, கட்டுமுறிவு  கிராம மக்களின் வேண்டு கோளிற்கிணங்க இலங்கைச் செஞசிலுவைச் சங்கத்தினால் நேற்று புதன்கிழமை அடிப்படை முதலுதவிப் பயிற்சி ஒன்று நடைபெற்றது.

வெள்ளம் அதிகரிக்கும் இக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் பாம்புக்கடி, கிருமித் தொற்றுக்கள் மக்களிடையே அதிகரித்துக் காணப்படுவது வழக்கம்.

இந்நிலைமையினைக் கருத்தில் கொண்டு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின மட்டக்களப்பு கிளையினால் அங்குள்ள தொண்டர்களுக்கும் கிராம மட்ட அமைப்புக்களுக்கும் அடிப்படை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உடனுக்குடன் வரும் நோய்களுக்கு முதலுதவி சேவையினை தமது கிராம மக்களுக்கு வழங்க முடியும் என அங்குள்ள இளைஞர் யுவதிகள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X