2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

சர்வதேச மருத்துவ ஆய்வு மாநாட்டு விருது கலாநிதி பாலாம்பிகை இராஜேஸ்வரனுக்கு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

இலங்கையில் நடைபெற்ற உலகில் 22 நாடுகளின் பல்கலைக்கழகங்கள்  பங்குகொண்ட சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி மாநாட்டு  விருது முதன்முறையாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாலாம்பிகை இராஜேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீஜெயவர்த்தனபுரம்,  களனி,  அநுராதபுரம் பாளி  ஆகிய பல்கலைகழகங்களைப் பிரதிநிதிநித்துவப்படுத்துகின்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இசை மூலம் மருத்துவம் என்ற ஆராய்ச்சிக்கே இவ்விருது கிடைத்துள்ளது.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நோர்வே, கிறீஸ், ஈரான் உள்ளிட்ட 22 நாடுகள் கடந்த 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்டன.

இவ்விருதைப் பெற்றுக்கொண்ட ஒரே இலங்கைத் தமிழர் இவராவார்.  முன்னர் இருந்த சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய பாலாம்பிகை இராஜேஸ்வரன், பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்தபோது அதன் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X