Kogilavani / 2012 மார்ச் 16 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் ஜே.ஜெயராஸ் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய மாநாடு நாளை மறுதினம் ஞயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இத் தேசிய மாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தீர்மானங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
இம் மாநாட்டை முன்னிட்டு நாளை சனிக்கிழமையன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் அக்கட்சியின் உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இப் பேராளர் மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் கட்சியின் தேசிய மாநாடடின் போது அறிவிக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இத் தேசிய மாநாடு நடைபெறும் சிவானந்தா தேசிய பாடசாலை மைதானம் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கொடிகள் மற்றும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
12 minute ago
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
30 minute ago