Super User / 2012 மார்ச் 20 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
மண்முனை வடக்கு, வாழைச்சேனை, ஏறாவூர் பற்று, ஆரையம்பதி, வவுணதீவு, வெல்லாவெளி, பட்டிப்பளை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
வவுணதீவு பிரதேச செலாளராக கடமையாற்றும் எஸ்.வில்வரட்னம் வெல்லாவெலி பிரதேச செயலாளராகவும் வெல்லாவெளி பிரதேச செயலாளராக கடமையாற்றும் எம்.உதய ஸ்ரீதரன் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளராகவும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றும் கௌரி தினேஸ் வாழைச்சேனை பிரதேச யெலாளராகவும் ஆரையம்பதி பிரதேச செயலாளராக கடமையாற்றும் எஸ்.தணபாலசுந்தரம் கிரான் பிரதேச செயலாளராகவும் பட்டிப்பளை பிரதேச செயலாளராக கடமையாற்றும் வாசுகி அருள்ராஜ் ஆரையம்பதி பிரதேச செயலாளராகவும் வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் எஸ்.கிறிதரன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் கிரான் பிரதேச செயலாளராக கடமையாற்றும் எம்.தவராஜா பட்டிப்பளை பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.வி.அபேகோனினால் உரிய பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் இடமாற்றம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரதேச செயலாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டிருந்த இடமாற்றங்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலையீட்டையடுத்து இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago