2026 மே 06, புதன்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கல்வி அபிவிருத்தி அமைப்பினால் கடந்த வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாணவர்களை கௌரவிக்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் பணிப்பாளர் எஸ்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.அப்துல்லா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது புலமைத் தாரகை என்னும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

மேற்படி கல்வி அபிவிருத்தி அமைப்பினால் நாடு பூராகவும் புலமைப்பரிசில் சித்தியடைந்த தமிழ்மொழி மூல மாணவர்களை கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .