2026 மே 05, செவ்வாய்க்கிழமை

கரடியனாறில் கைக்குண்டுகள் மீட்பு

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பவட்டுவான் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இரு கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இக்கைக்குண்டுகள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

வேப்பவட்டுவான், பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள பொந்து ஒன்றினுள் இருந்து மேற்படி  கைக்குண்டுகள் மீட்கப்பட்டதுடன் அவற்றினை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .