2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

ஹிஸ்புல்லா மைதானத்தின் புனரமைப்பு வேலைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் பார்வை

Kogilavani   / 2012 ஜூன் 18 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

இவ்வாண்டு தேசிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ள காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு வேலைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் புனரமைக்கப்பட்டுவரும் இந்த மைதானத்தின் புனரமைப்பு வேலைகளை பார்வையிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே புனரமைப்பு வேலைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மைதான புனரமைப்பு வேலைகள் தொடர்பான கலந்துரையாடலொன்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர்காளன ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்த முரளிதரன், காத்தான்குடி நகர முதலவர் எஸ்.எச்.அஷ்பர் ஆகியோர் கலந்து கொண்டதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .