2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புதிய காத்தான்குடி அல் - இக்பால் வித்தியாலயம் திங்கட்கிழமை வரை மூடல்

Super User   / 2013 ஜனவரி 02 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


புதிய காத்தான்குடி, றிஸ்வி நகர் அல் - இக்பால் வித்தியாலயம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஏ.எல்.அஹமட்லெவ்வை தெரிவித்தார்.

தமது பாடசாலைக்கான புதிய கட்டிடத்தை பாடசாலைக்கு வழங்குமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஏ.எல்.அஹமட்லெவ்வை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பாடசாலைக்கான புதிய கட்டிடத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உறுதியளித்தார்.

இதனால், எதிர்வரும் திங்கட்கிழமை வரை பாடசாலை மூடப்பட்டிருக்கும் எனவும் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்குள் மாணவர்கள் செல்லுவதற்காக தற்போது இந்த பாடசாலையின் புதிய கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்ற தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளருடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வை பெறவுள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் நசிறா, நிருவாக உத்தியோகத்தர் ஷாபி, கிழக்கு மாகாண சபை முன்னாள்  உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

சுனாமி அனர்த்தத்தினால் சேதமடைந்த புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் - இக்பால் பாடசாலை கட்டிடம் நோர்வே நாட்டு நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இப்பாடசாலைக்கு 2007ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த பாடசாலையின் புதிய கட்டிடம் தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சி நடவடிக்கைகளுக்காக  2009ஆம் ஆண்டு பிரதியமைச்சர் எம்.ஏ.எம்.எம். ஹிஸ்புல்லாவினால் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு வழங்கப்பட்டது.

தற்போது இந்த வித்தியாலயம் அதன் பழய கட்டிடத்தில் சிரமத்திற்கு மத்தியில் இயங்கி வருகின்றது. இந்நிலையிலேயே தமக்குரிய பாடசாலையின் புதிய கட்டிடத்தை வழங்க வேண்டும் என கோரி பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பாடசாலை பகிஷ்கரிப்பிலும் இன்று ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Mokammed Hiraz Wednesday, 02 January 2013 12:32 PM

    இது ஒரு அரசியல் சுனாமி பின் புலத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையால் வழங்கபடும் இலவச பயிற்சியை முடிவுக்கு கொண்டுவந்து அதேபயிற்சியை தங்கள் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள் மூலம் மாணவர்கள் அதிக பணம் செழுத்தி பெற்று தங்கள் புலப்பை அமோகமாக வளர்க்க வேண்டும் என்ற வயிற்றெறிச்சல் பிடித்த கூட்டம் சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பதுபோல் இயங்குகிறார்களாக்கும்

    Reply : 0       0

    Mokammed Hiraz Wednesday, 02 January 2013 12:35 PM

    காத்தான்குடி உயர்கல்வி மாணவர்களுக்கு புதிய வலய கல்வி பணிப்பாளர் வைக்கும் முதலாவது ஆப்பாக இது அமைய போகிறது. இன்னும் எத்தனை ஆப்புகள் காத்திருக்கோ வலயகல்வி துறை கல்வி உயர் கல்வி ஓங்குவதட்கு கைகொடுக்க அமைக்கபட்டதா அல்லது பிரதேசத்தில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை திட்ட மிட்டு அகற்றி கல்வியில் முன்னேறி வரும் பிரதேசத்தை பின்தள்ள கைகொடுக்க உருவாக்கப்பட்டதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .