2026 மே 05, செவ்வாய்க்கிழமை

வவுணதீவில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் மீட்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.லோஹித்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலிருந்து ஒருதொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்திலுள்ள வலையறவு பாலத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று புதன்கிழமை காலை மேற்படி பணிகளில் ஈடுபட்ருந்த பணியாளர்கள், துப்பாக்கி ரவைகளைப் பார்வையிட்டு அது தொடர்பில் வவுணதீவு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர்.

தடிப்பமான பை ஒன்றினுள் பொதி செய்யப்பட்ட நிலையில் 1,364 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பிரதேசம், விடுதலைப புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த காலத்தில் அவ்வியக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகளாக இவை இருக்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .