2026 மே 05, செவ்வாய்க்கிழமை

ஆயுதமுனையில் கார் கடத்தல்

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பில் வைத்து காரொன்று ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்தே இவ்வாறு  ஆயுதமுனையில் இன்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி, பூநொச்சிமுனையை சேர்ந்த எச்.எம்.கசியுதீன் என்பவரின் காரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
அவர் கண்டி நோக்கி இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறித்த பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய சிலர் காரை வழிமறித்துள்ளனர்.

காரிலிருந்து அவரை இறக்கிவிட்டு ஆயுததாரிகள் காரை கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பில்  எச்.எம்.கசியுதீன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காரை செலுத்திச் சென்ற கசியுதீன், தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் விற்பனை மேற்பார்வையாளராக கடமையாற்றுகின்றார்.

இந்த கார் குறித்த தனியார் நிறுவனத்தினாலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .