2026 மே 06, புதன்கிழமை

கணவனை இழந்த பெண்களுக்கு சுயதொழில் உதவி

Menaka Mookandi   / 2013 மார்ச் 27 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கனடா கிழக்கு ஒளி இணையத்தின் உதவி மூலம் கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை நாவற்குடா கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடத்தப்பட்டது.
 
வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக்காக ஒன்பது பேருக்கு தலா இருபத்தி நான்காயிரம் ரூபாவும் மற்றும் ஒருவருக்கு பதினையாயிரம் ரூபாவுமாக மொத்தமாக பத்து பேருக்கு இரண்டு இலட்சத்து முப்பத்தொராயிரம் ரூபா வழங்கப்பட்டது.
 
இவ்உதவிகளை புரிந்த கனடா கிழக்கு ஒளி இணையத்தின் அமைப்பினருக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரும், கணவனை இழந்த பெண்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
 
அத்தோடு இன்று மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கடந்த காலங்களில் புலம்பெயர் உறவுகள் மற்றும் நம்நாட்டு அமைப்பினர் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வறுமையில் வாழும் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கிய அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, இவர்களால் வழங்கப்பட்ட உதவிகள் பற்றி கணக்கறிக்கையும் இங்கு பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மற்றும் பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் ஆகியோரால் ஆட்சிக்குழுவினருக்கு அறிக்கை சமர்;பிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் ந.புவனசுந்தரம், பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன், பேரவையின் இணைப்பாளர்களான ச.ஜெயகரன், க.ரகுநாதன், கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர் எஸ்.நீதிராஜ், உட்பட பேரவையின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், இணை அமைப்பு பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .