2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோத இரத்த பரிசோதனை நிலையங்கள் முற்றுகை

Super User   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச வீடுகள் மற்றும் சிறு கடைகள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக இரத்த பரிசோதனை நிலையங்கள் இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் இயங்கி வரும் இரத்த பரிசோதனை நிலையங்களை காத்தான்குடி சுகாதார அலுவலகம மற்றும் காத்தான்குடி நகர சபை ஆகியன இணைந்து பரிசோதனை நடவடிக்கை ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

இதன்போதே இந்த சட்டவிரோத இரத்த பரிசோதணை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிசோதணை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இயங்கும் சில இரத்த பரிசோதனை நிலையங்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததுடன் இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுள்ளார்

கொழும்பிலுள்ள பிரபல வைத்தியசாலைகளின் பெயர்களை விளம்பரமாக வைத்து சட்டவிரோதமாக இந்த இரத்த பரிசோதணை நிலையங்கள் செயற்பட்டு வந்துள்ளதும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர் நசிர்தீன் குறிப்பிட்டார்.

இந்த இரத்த பரிசோதணை நிலையங்களில் காலையில் பெறும் இரத்தம் உரிய நேரத்திற்கு பரிசோதிக்கப்படாததும் எடுக்கப்படும் இரத்தம் குளிரூட்டிகளில் வைக்கப்படாமையும் இரத்தம் பெறும் ஒழுங்குகளுக்கு அமைய இந்த இரத்த பரிசோதனை நிலையங்கள் செயற்படாமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் இயங்கும் இரத்த பரிசோதணை நிலையங்களை மூடி முறையான அனுமதிப்பத்திரம் பெற்ற பின்னரே இவைகள் திறக்கப்படவேண்டும் என உரிய பரிசோதணை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டர்கடர் நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.

இதன் போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், நகர சபை அதிகாரிகள் ஆகியோரும் சென்றிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .