2026 மே 06, புதன்கிழமை

ஒமடியாமடு கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒமடியாமடு கிராமத்தில் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு பெண்களை தலைவராகக் கொண்ட  குடும்பங்கள், விசேட தேவைக்கு உட்பட்டோரைக் கொண்ட 44 குடும்பங்களுக்கு  வீடுகளை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மலசலகூடம் உட்பட சுமார் 580,000 ரூபா
பெறுமதியில் தலா வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகேட் நிறுவகத்தின் அனுசரணையுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த வீடுகளை கட்டுவதற்காக படிப்படியாக  வழங்கப்படும் பணத்தைக் கொண்டு பயனாளிகளே வீடுகளை நிர்மாணிக்கவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .