2026 மே 06, புதன்கிழமை

இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன், எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரீ.கருணாகரன் உத்தரவிட்டார்

ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இந்த 4 சந்தேக நபர்களையும் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே நீதிபதி  இதற்கான உத்தரவைப் பிறப்பித்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடியில் இடம்பெற்ற இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவர்களின் மகள், அவரது காதலன் மற்றும் காதலனின் 2 நண்பர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செங்கலடிப் பகுதியில் வர்த்தகர் ஒருவரும் அவரது மனைவியும் தங்களது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது கடந்த 8ஆம் திகதி அதிகாலை வேளையில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .