2026 மே 06, புதன்கிழமை

கொக்கட்டிச்சோலையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கொலனி குடியேற்றக் கிராமத்திலிருந்து அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கச்சைக்கொடி எனும் கிராமத்தில் டோஸர் இயந்திரத்தின் மூலம் நிலத்தைத் சமப்படுத்தி துப்பரவு செய்து கொண்டிருந்த போது இந்த சடலம் தென்பட்டதால் கொக்கட்டிச்சோலைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மரண விசாரணைகளை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .