2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் பதவி நிரப்பப்படவில்லை

Suganthini Ratnam   / 2013 மே 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் பதவி வெற்றிடம் கடந்த 6 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளதாக நகர சபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எல்.அக்கீல் அர்ஸாத் என்பரின் நகர சபை உறுப்பினர் பதவியே வெற்றிடமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து நகர சபையின் மாதாந்தக் கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமுகமளிக்கவில்லை. இந்த நிலையில், தொடர்ந்து 3 மாதங்களுக்குச் சமுகமளிக்காத உறுப்பினரின் பதவி உள்ளுராட்சிமன்ற சட்ட விதிகளின்படி இயல்பாகவே வெற்றிடமாகி விடும் எனவும் அவர் கூறினார்.

வெற்றிடமாகியுள்ள நகர சபை உறுப்பினரின் பதவி  குறித்து தாங்கள் ஏற்கெனவே தேர்தல் திணைக்களத்துக்கு அறிவித்திருப்பதாகவும் நகர சபைச் செயலாளர் ஹமீம் மேலும் தெரிவித்தார்.

விதிகளின் படி இந்த வெற்றிடத்திற்கு பட்டியலிலுள்ள அடுத்தவரை நியமிக்க வேண்டும். ஆனால் பட்டியலில் அடுத்ததாக உள்ளவர் வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதால் அவரை நியமிக்க முடியாதுள்ளது. இந்நிலையில், பட்டியலில் இரண்டாவதாக உள்ளவரையே நியமிக்கக் கூடிய சாத்தியமிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .