2026 மே 06, புதன்கிழமை

கண்ணகிபுரம் கிராமத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்

Super User   / 2013 மே 07 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.எம்.ஹுசைன்

வாழைச்சேனை, கண்ணகிபுரம் கிராமத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டமொன்று முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமம் வருடா வருடம் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற ஒரு கிராமமாகும்.

இந்த கிராமத்தில் மழை காலம் மற்றும் வெள்ள காலங்களில் கிராமங்களில் தேங்கி கிடக்கின்றன. நீர் வடிந்தோடுவதற்கான இயற்கையான வடிகான்கள் இருந்தும் அது செயலற்றதன் விளைவாக அவ் வெள்ள நீர் வடிந்தோடாமல் கிராமத்திலே தேங்கி கிடப்பதனால் அக் கிராம மக்கள் பெரும் கஸ்டத்திற்கு முகங்கொடுத்து வந்திருக்கின்றார்கள்.

இது குறித்து மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று அக்கிராமத்திற்கு விஜயம் செய்து; கிராம மக்களோடு நேரடியாக கலந்துரையாடி அவர்களது கருத்துக்களை பெற்றுக்கொண்டார்.

இதனடிப்படையில் உடனடியாக வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிகான் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.  மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் தலைமையில் கண்ணகிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.

அக்கிராம மக்களின் விருப்பத்திற்கு அமையவே குறித்த வடிகான் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்திற்கு கிராம உத்தியோகஸ்த்தர் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள்.

முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களது எற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ்; நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .