2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூர் நகர சபை உறுப்பினராக முஸ்தபா நியமனம்

Super User   / 2013 மே 09 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகர சபையில் வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவிக்கு ஜே.எம்.முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அதில் கே.எல்.அக்கீல் அர்சாத் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நகர சபை கூட்டங்களுக்கு சமூகமளிக்கவில்லை.

இதனால் அவரின் பதவி வெற்றிட ஏற்பட்டது. அந்த பதவி வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்கின் அடிப்படையில் மூன்றாவது இடத்திலுள்ள கியாஸ் என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

இதனால் அவருக்கு அடுத்ததாக விருப்பு வாக்கு பட்டியலிலுள்ள ஜே.எம்.முஸ்த்தபா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயமகம் எம்.ரி.ஹசன் அலியினால் சிபாரிசு செய்யப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பசீர் தெரிவித்தார்.

மேற்படி முஸ்தபா ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு 987 விருப்பு வாக்குகளை பெற்றிருந்ததுடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • vallarasu Friday, 10 May 2013 05:53 AM

    ஐயா முஸ்த்தபா... நீங்கள் ஓர் ஆசிரியர்... தற்போது எமது முஸ்லிம் பிரச்சினையும், முஸ்லிம் காங்கிரஸும் இருக்கும் நிலைப்பாட்டை பார்த்துக்கொண்டும் பதவிக்காக போய் உள்ளீர்கள். இப்போ நீங்களும் மௌன வீரர் ஆகிவிட்டீர்களே..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .