2026 மே 06, புதன்கிழமை

சவுதி அரேபிய உயர் அதிகாரிகள் குழு மட்டக்களப்பு விஜயம்

A.P.Mathan   / 2013 மே 11 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன் 
 
சர்வதேச இஸ்லாமிய கலாசார அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவரும் நிதாஉல் ஹைர் அமைப்பின் பணிப்பாளருமான சைஹ் ஹாலித் தாவுத் தலைமையிலான அரேபிய குழுவினர் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விமானம் மூலம் வருகை தந்தனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் வருகை தந்த குழுவினர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சமூக, சமய, கலாசார அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.
 
பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரில் வருகை தந்த இக்குழுவினரை மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி நகர காத்தான்குடி முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதி முதல்வர் ஜெசீம், கிழக்கிலங்கை ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையின் முதல்வர் முஹம்மட் பஸீர், ஹிறா பௌன்டேசனின் பொறுப்பாளர் மௌலவி மும்தாஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியத் துறையின் பொறுப்பாளர் அலியார் றியாழி, ஜெம்மியாவின் தலைவர் மௌலவி அலியார் உற்பட முக்கிய அதிகாரிகள் பலரும் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .