2026 மே 06, புதன்கிழமை

தாயைக் கொன்ற மகனுக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 மே 11 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
காத்தான்குடியில் தாயை அடித்து கொலை செய்த மகனை எதர்வரும் 21ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா நேற்று உத்தவிட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
 
காத்தான்குடியில் கடந்த வியாழக்கிழமையன்று புத்தி சுவாதீனமற்ற மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவரான எம்.இர்ஷாத் என்னும் சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
 
இதன்போது எதர்வரும் 21ஆம் திகதிவரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா உத்தவிட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
 
வியாழக்கிழமையன்று காத்தான்குடி பாவாலேனில் வசித்து வந்த ஏ.ற்மத்தும்மா (54) என்பவரை அவரது புத்தி சுவாதீனமற்ற மகன் தாக்கி அடித்து கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .