2026 மே 06, புதன்கிழமை

மக்களை ஏமாற்றி பணம் பெற்ற ஐவர் கைது

Super User   / 2013 மே 12 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.எம்.எம்.முர்ஷித்

வீடு கட்டித்தருவதாக கூறி ஓட்டமாவடி பிரதேசத்தில் பொதுமக்களிடம் பணம் பெற்று வந்த ஐந்து பேரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாங்கள் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் என்றும் வீடுகளை கட்டித்தருவதாகவும் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்று வந்துள்ளனர். இவர்கள் ஓட்டமாவடி, மாஞ்சோலை கிராமத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டு பணம் பெற்ற காங்கேயனோடை சேர்ந்த முகம்மது நசுர்தீன் மற்றும் கதுறுவெலயைச் சேர்ந்த இருவரும் கல்லலையை சேர்ந்த இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இருவர் இந்த வியடத்தில் தொடர்பு இல்லாததால் அவர்களிருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டு பணம் பெற்ற காங்கேயனோடை சேர்ந்த முகம்மது நசுர்தீன் என்பவரே இதன் பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடமிருந்து வேன் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஏழு பேரிடம் தலா 30,000 ரூபா வீடுகட்டித்தருவதாக பணம் பெற்றுள்ளதாக பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .