2026 மே 06, புதன்கிழமை

மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவராக தமிழரை நியமிக்க கோரிக்கை

Super User   / 2013 மே 12 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

பெரும்பான்மையாக தமிழர் வாழும் மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவராக  தமிழரை நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணமினால் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் மாகாண சபை உறுப்பினர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"இந்த பிரதேசம்  27 கிராம சேவையாளர்  பிரிவுகளையும் 50 கிராமங்களையும் உள்ளடக்கியது. 2,081 முஸ்லிம்  குடும்பங்களையும்  8, 150 தமிழ் குடும்பங்களையும் இப்பிரதேசம் உள்ளடக்கியுள்ளது. இப்பிரதேச செயலகப்பிரிவில் அதிகாரமிக்க அரசியல்வாதிகளால், பல முரண்பாடுகள்  அரசியல்  இலாபம்  கருதி  திட்டமிட்டவாறு தோற்றுவிக்கப்படுகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் காரணங்கள் சான்றாகின்றன.

1)அதிகாரமுள்ள  அரசியல்வாதிகளால்  அரசாங்கத்தினதும்,  நிதி நிறுவனங்களிளனதும்  நிதியை ஒதுக்கீடு செய்யும்போது தமிழ்ச்சமூகம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
2)காணிக் கையாளுகையில் அரசகாணிகளையும், தனியாருக்குச் சொந்தமான வெற்றுக்காணிகளையும் கையாளும்போது இன ரீதியான முறுகல் நிiலையை ஆளும்ஆட்சி அதிகாரமுள்ளவர்கள் தங்கள் நலன்கருதி தோற்றுவிக்கின்றனர்.
3)அரச பலத்தையும் அதிகாரத்தையும்,  வைத்துக்கொண்டு  ஒரு பக்கச்சார்பான முடிவுகளை தனிச்சையாக மேற்கொள்வதனால் இன ரீதியான முறுகல்நிலை தோற்றுவிக்கப்படுகின்றது.
4)மண்முனைப்பற்று பிரதேச சபை,  பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி பிரதேச செயலகம் அத்துமீறி   பல விடயங்களில் தலையிடுவதால் நிருவாகரீதியாக பல முரண்பாடுகள்  தோற்று விக்கப்படுகின்றன.
5)குறிப்பிட்ட சில மாதங்களாக ஆரையம்பதி பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகிய இரு பகுதிகளிலும் நடந்து வருகின்ற முரண்பாடுகள் காரணமாக இங்கு தமிழ் சமூகத்திற்கு சேவையாற்றிய நல்லதொரு அதிகாரி முறைகேடான முறையில்  பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற முயற்சிக்கு உட்பட்டிருக்கின்றார்.

கடந்த காலத்தில் திரைமறைவில் தமிழ் சமூகத்திற்கு பல விரும்பத்தகாத சம்பவங்கள்  நடந்தேறியுள்ளது. இனிமேலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு, தமிழர் ஒருவரை அபிவிருத்திதிக்குழு தலைவராக நியமிக்க வேண்டும்.

அல்லது இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் தலைவர்களாக நியமித்து எதிர்காலத்தில் இரு இனங்களுக்கும்  இடையில்  முரண்பாடு தோன்றாமல் வாழ்வதற்கு மத்திய அரசு வழிவகுக்க வேண்டும்.

இரண்டு சமூகமும்  வாழ்கின்ற இப்பிரதேசத்திற்கு முஸ்லிம் ஒருவரை தலைவராக நியமித்து இன முரண்பாடுகளை தோற்றுவித்து இப்பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் திரை மறைவில் திட்டமிட்டு மத்திய அரசு ஈடுபடுவதன்மூலம் இன வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் கருதி, குளிர்காய முனைப்பு காட்டி நிற்போதோடு அல்லாமல் இனங்களுக்கிடையே பிரித்தாளும் தந்திரத்தை  கையாள்வதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு தலைமை தாங்குகின்றார்களோ அவ்வாறே தமிழ் சமூகத்திற்கு தமிழ்த் தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும் இது இனவாதமல்ல இது தமிழ் மக்களின் உரிமையாகும்' என்றார்.

  Comments - 0

  • Saran Sunday, 12 May 2013 04:19 PM

    அப்படியானால் இவரு தலைவராகலாமே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .