2026 மே 06, புதன்கிழமை

தமிழர்களின் இருப்புக்கு பொருளாதாரம், கல்வி இரண்டும் முக்கியமானதாகும்: பிரதியமைச்சர் முரளிதரன்

Kanagaraj   / 2013 மே 13 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் குறுகிய காலத்தில் கூடி அபிவிருத்திகளை கண்டுள்ள மாவட்டமாகும் என்பதுடன்  தற்போதய காலகட்டத்தில் தமிழர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு பொருளாதாரம், கல்வி ஆகிய இரண்டையும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் அப்துபோதுதான் தமிழினம் முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்;தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்.பட்டிருப்பு புளுடையமன் விளையாட்டுக் கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய விளையாட்டு விழாவில் பிராதம  அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்.  

இங்கு நடைபெற்ற விளையாட்டுக்களைப் பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள் வருகின்றன. உங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த சந்தோசமாகவுள்ளது. உண்மையிலேயே யுத்தம் நீடித்திருந்தால். இங்கு காண்கின்ற இளைஞர் யுவதிகளைக் கண்டிருக்க முடியாது.  பட்டிருப்பு என்ற பெயரை வைத்துக் கொண்டுதான் பட்டிருப்பு தொகுதிக்கும் பெயர் அமையப் பெற்றது. பட்டிருப்பு தொகுதி தனித் தமிழ் தொகுதியாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்திகளை நான் மேற்கொண்டு வருகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கல்வியில் மிகுந்த பாடசாலையாகத் திகழும் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலைக்கு 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்தப் பிரதேசத்திலேயே மிகவும் பெறுமைதிவாய்ந்த சேவை புரிந்து கொண்டுவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலைக்கு 450 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக ஒதக்கீடு செய்யப் பட்டுள்ளது.

அதேபோல களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீதமான நிதிகள் அனைத்தினையும் பட்டிருப்பு பொது மைதான அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்துள்ளோம்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றத்தினைக் கண்டு வருகின்றது. படுவான்கரைப் பகுதி அனைத்துக்கும் தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பாடசாலைத்திட்டம், ஐயாயிரம் பாசாலைத் திட்டம். போன்ற திட்டங்களின் அடிப்படையல் பாடசாலைகள் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

குறுகிய காலத்தில் கூடி அபிவிருத்திகளை கண்டுள்ள மாவட்டம் என்றால் அது மட்டக்களப்பு மாவட்டம் தான் தற்போதய காலகட்டத்தில் தமிழர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு பொருளாதாரம், கல்வி ஆகிய இரண்டையும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் அப்துபோதுதான் தமிழினம் முன்னோக்கிக் கொண்டு செல்லும்.

கடந்த காலத்தில் 50 அமைச்சுக்களுக்கு 35 இற்கு மேற்பட்ட தமிழர்கள் செயலாளர்களாக இருந்துள்ளார்கள். ஆனால் தற்போது 55 இற்கு மேற்பட்ட அமைச்சுக்களுக்கு இரண்டு தமிழர்கள் மட்டுமே செயலாளர்களாக உள்ளனர். இவற்றுக்குகெல்லாம் கடந்த கால யுத்தம்தான் காரணமாகும்.

தமிழ் புத்திஜீவிகள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். இவ்வாறான நிலையில் நம்மவர்கள் கல்வியில் அதீத அக்கறை செலுத்தி முன்னேறிக்கொண்டு செல்ல வேண்டும்.

நீங்கள் நினைக்கலாம் என்னடா கருணா அம்மான் அரசாங்கத்துடன் நிற்கின்றார் என எண்ணலாம் ஆனால் வளம் எங்கு இருக்கின்றதோ அங்குதான் நிற்கவேண்டும் அது சிலவேளைகளில் மாற்றம் பெறலாம்.

அரசாங்கம் சகல வளங்களையும் மேற்கொண்டுள்ளது அதனை வைத்துக் கொண்டு நாம் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அழைத்து மட்டக்களப்பு நகரத்தினை காட்டியமைக்காக பாரிய அபிவிருத்திகளும் அழகு படுத்தும் வேலைத் திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அதுபோல் கிராமங்களிலும்; பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

30 வருடகால யுத்தம் பல வடுக்களை சுமந்து நிற்கின்றது அதிலிருந்து விடுபட வேண்டுமானால் இன்னும்  10 ஆண்டுகள் தேவை அதற்காக மட்டக்களப்பு மக்களை வாழ்வாதார ரீதியாக முன்னேற்றமடையச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. மாவட்டத்தின் கட்டுமானத் தேவைகள் அதிகம் இடம்பெற்றுவிட்டன தற்போதைய நிலையில் வாழ்வாதாரத் திட்டங்களே தேவையாகவுள்ளது. அதனையே தற்போது மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.     


  Comments - 0

  • vallarasu Tuesday, 14 May 2013 06:23 AM

    ஐயா... அமைச்சர் அவர்களே... தமிழ் மக்கள் மீது இவ்வளவு அக்கறையாய் உள்ளீர்களே, ஆட்சி மாறினால்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .