2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட முதிரை மரங்கள் கைப்பற்றல்

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த முதிரை மரக் குற்றிகளையும் உழவு இயந்திரத்தினையும் வாழைச்சேனை பொலிஸார் இன்று (சனிக்கிழமை) காலை கைப்பற்றியுள்ளனர்.
 
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் பெரேராவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரியுமான எல்.அமரசேகர தலைமையில் சென்ற குழுவினர் இருபத்தெட்டு முதுரை மரக் குற்றிகளையும் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
 
மரங்களை உழவு இயந்திரத்தில் ஏற்றிய நிலையில் பொலிஸாரைக் கண்டதும் சட்டவிரோத மரங்களை விற்பனை செய்யும் கும்பல் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவிர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .