2026 மே 06, புதன்கிழமை

இலங்கை செஞ்சிலுவை சங்க மட்டக்களப்புக் கிளையின் புதிய உறுப்பினர்கள்

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
 
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டமும் பொதுச்சபைக்கான தேர்தலும் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
மட்டக்களப்பு கிளையின் புதிய தலைவராக போட்டியின்றி ரி.வசந்தராஜா, சாமித்தம்பி மதுசுதன், ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். அதேநேரம், நடைபெற்ற தேர்தலையடுத்து உப தலைவராக எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ், பொருளாளராக வடிவேல் சக்திவேல் ஆகியோரும் தெரிவு செயய்ப்பட்டனர்.
 
அதே நேரம், கிளைக்குழு உறுப்பினர்களாக காத்தமுத்து இராசரெத்தினம், சண்முகம் கணேசலிங்கம், விஸ்வநாதன் லலிதா, கந்தசாமி நவநாதன், ஆறுமுகம் சோமசுந்தரம், கார்த்திகேசு சந்திரவதனி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இன்று நடைபெற்ற தேர்தலில் மாவட்டத்தின் ஒன்பது கிளைக்குழுக்களின் 94 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
 
இந்த புதிய பொதுச்சபை இன்னமும் 4 வருடங்களுக்கு பதவியில் இருக்கும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .