2026 மே 06, புதன்கிழமை

மின் கட்டண உயர்வுக்கு எதிராக பதாகைகள்

Suganthini Ratnam   / 2013 மே 21 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மின் கட்டண உயர்வைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக கம்பி வேலியில் எதிர்ப்பு பதாகைள் இன்று செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

'நாட்டை ஒளியேற்ற வீட்டை இருளாக்காதே'இ 'மின்சாரக் கட்டண உயர்வை மீளப் பெறும்வரை பேராடுவோம்'இ 'ஊழியர்களின் வயிற்றில் அடிக்கதே'இ 'மின்சாரக் கட்டண உயர்வை உடன் நிறுத்து'இ 'தொழிலாளர் மீது பளுவைத் திணிக்காதே' போன்ற வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன.

இன்று செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தபோதிலும், இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் இதனால் சுவரொட்டிகளை கம்பி வேலியிலும் நிலத்திலும்  போட்டு விட்டு ஏற்பாட்டாளர்கள் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0

  • vallarasu Wednesday, 22 May 2013 08:23 AM

    பயம்... அவர் என்றால் பயம்...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .