2021 ஜூலை 31, சனிக்கிழமை

வாகன சாரதிகள் நால்வருக்கு விளக்க மறியல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான் 


மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேரை ஏற்றி வந்த வாகன சாரதிகள் நால்வருக்கு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோவிரோதமாக ஆஸி செல்ல முற்பட்ட 70 பேர் புதன்கிழமை மட்டக்களப்பில் கைதானார்கள்.

இவர்களை, மூன்று வான்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் ஏற்றிவந்ததாக கூறப்படும் வாகன சாரதிகள் நால்வரை பாலமீன்மடுவில் வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைதுசெய்தனர்.

இதேவேளை 4 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியதுடன் இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, மேற்படி நால்வரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .