2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வீதி அணிவகுப்பு மரியாதை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
, எம்.எஸ்.நூர்தீன்

ஆறுமாதங்களுக்கு ஒரு தடைவை நடைபெறும் மட்டக்களப்பு, பொலிஸாரின் வீதி அணிவகுப்பு மரியாதை இன்று காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

பேண்ட் வாத்தியத்துடன் ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு டெலிகொம் சந்தியிலிருந்து திருமலை வீதியூடாக நகர மணிக்கூட்டு கோபுரசுற்று வட்டம்வரை வந்து பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.

இவ் அணிவகுப்பு மரியாதையில் போக்குவரத்து, மோட்டார் சைக்கிள், வாகனங்கள் மற்றும் பொலிஸ் நாய்கள் என்பன இடம்பெற்றன.

அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி  பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்மன, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ண ஆகியோர் கோட்டைமுனை பாலத்தில் வைத்து பார்வையிட்டனர்.

மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட மட்டக்களப்பு பொலிஸார் இதில் பங்கேற்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X