2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கெவுளியாமடுவில் புதிய வீடமைப்புத் திட்டம்

Super User   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவுளியாமடுவில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. 'ஹெலபிம'எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினாலேயே இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளுக்கு அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதி அம்பிட்டிய சோமரத்ன தேரர், கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா உட்பட கெவுளியாமடுவில் குடியேறியுள்ள சிங்கள மக்களும் கலந்துகொண்டனர்.

இங்கு வந்து குடியேறி தற்காலிகமாக கொட்டில்களை அமைத்துக் கொண்டுள்ள வறிய குடும்பங்களுக்கு 15 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இதுவாகும் என ஹெலபிம அமைப்பின் பிரதிநிதி சுனில் சந்திரகுமார தெரிவித்தார்.

ஆரம்ப தங்குமிட வசதிக்காக அமைத்துக் கொடுக்கப்படும் இந்த வீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா வீடமைப்புக்காக  வழங்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தை தலைமையகமாக கொண்டுள்ள தமது அமைப்பு இருப்பிடமின்றி அல்லற்படும் ஏழைகளுக்கு இன, மத, மொழி வேறுபாடுகளின்றி உதவுவதையே நோக்கமாகக் கொண்டது என சுனில் சந்திரகுமார தெரிவித்தார்.

தமது அமைப்பு ஏற்கெனவே  கெவுளியாமடு பிரதேசத்தில் உள்ள வீடற்ற வறியவர்களைக் கொண்ட 16 குடும்பங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான 16 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருப்பதாகவும்  அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X