2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகு திரும்பவில்லை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்கு தொழிலுக்காகச் சென்ற படகு ஒன்று கடந்த ஏழு நாட்களாகியும் கரைக்கு திரும்பவில்லை என்று படகின் உரிமையாளரால் வாழைச்சேனை பொலிஸில் கடந்த (வியாழக் கிழமை) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாழைச்சேனை ஹைறாத் பள்ளி வாயல் துறையடியில் இருந்து கடந்த சனிக்கிழமை (03.08.2013) ஆழ் கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு இரண்டு தினங்களில் திரும்ப வேண்டியது இன்னும் திரும்பவில்லை என்றும் அவர்களுடனான கையடக்கத் தொலைபேசி தொடர்பு கடலுக்குச் சென்ற தினத்தில் இருந்து கிடைக்க வில்லை என்றும் படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முபாறக் தெரிவித்தார்.

கடலுக்குச் சென்றவர்களில் அபூபக்கர் முஹம்மது நஷீர், அறபாத் அன்றழைக்கப்படும் எச்.எம்.எம்.ஹபீழ், அஸீஸ் அன்றழைக்கப்படும் முஸ்தபா லெப்பை முஸ்தபா ஆகிய மூவருமே கடலுக்குச் சென்றவர்களாவர் என படகு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X