2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் விவசாயக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, ஏறாவூர் இளைஞர் விவசாயக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விவசாயக் கண்காட்சியொன்று நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பமாகியது. 

ஏறாவூர் தாமரைக்கேணியில் நடைபெறுகின்ற  பெறும் இக்கண்காட்சியில் பல்வேறுபட்ட காய்கனிகள், இலை வகைகள், மரக்கறி வகைகள், மூலிகை வகைகள், அழகுத் தாவரங்கள்,  நீண்டகாலப் பயன் தரும் கனிமரங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயக் கண்காட்சி ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளர் எம்.எல்.அப்துல்றஹ்மான் தலைமையில் நடைபெறுகின்ற இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹுஸைன், பிரதேச விவசாயப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரிஸ், விவசாயப் போதனாசிரியர் எம்.ஜமால்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வீட்டுத் தோட்ட உற்பத்தியை அபிவிருத்தி செய்து நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதோடு, மறைந்து கிடக்கும் விவசாய நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு ஊடாக நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் இளைஞர்களின் முயற்சி மேலோங்க வேண்டும் என்பதாலேயே தாம் இந்தக் கண்காட்சியை நடத்துவதாக மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹுஸைன் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X