2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு. நகரில் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு நகர் வருடா வருடம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக நீர் வடிந்தோடும் இடங்களை தேர்ந்தெடுத்து சீர்படுத்தும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை வடக்கு பிரதேச செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

மட்டக்களப்பு நகரின் நாவற்கேணி, கருவேப்பங்கேணி, சின்ன ஊறணி, இருதயபுரம், பார் வீதி, ஜெயந்திபுரம், தாமரைக்கேணி, கூழாவடி, மாமாங்கம் போன்ற கிராமங்கள் நீரில் மூழ்குவதற்கு ஒரு சிலர் இயற்கை ஓடைகளை அடைத்து வைத்திருப்பதே காரணமாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்,  கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன், மட்டகளப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் ஆகியோர் இவ்வாறான இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

இயற்கையாக நீர் வடிந்தோடும் ஓடைகளை பெரும்பாலான மக்கள் தங்களுக்கு சாதகமாக மதில்கள் மூலமும் வீடுகள் மூலமும் தடுப்புச் சுவர்கள் அமைத்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X