2025 மே 05, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் புதன்கிழமை  14 அதிகாலை வீடொன்றில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி முத்துவாப்பா வைத்தியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலேயே இக் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வீட்டிலுள்ள அலுமாரி உடைக்கப்பட்டு இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இந்த வீட்டிலிருந்த 7 பவுன் தங்க மாலை மற்றும் 5 பவுன் தங்க காப்பு 4,  எழுபதாயிரும் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்று உட்பட 22,000 ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இக்கொள்ளைச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி பிரதேசத்தில், மயக்கமூட்டும் திரவியம் தெளித்து கொள்ளைகள் இடம்பெறுவது தொடர்செயற்பாடாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X