2025 மே 05, திங்கட்கிழமை

பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று புதன்கிழமை சந்திவெளி சித்தி விநாயகர் கணிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மேற்படி பாடசாலை அதிபர் ம.சிவசுந்தரம் தலைமயில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டு மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பரீசீலனை செய்து தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன்போது பின்வரும்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சந்திவெளி பிரதேசத்தில் நீண்டகாலமாக தொலை தொடர்பு வசதி இல்லாமல் உள்ளதாகவும் இதனால் அன்றாட தொடர்பாடல் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாமல் உள்ளதாகவும் இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாற் இப்பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதற்கு ஓக்டோபர் மாதம் அளவில் முதற்கட்டமாக 250 தொலைபேசி இணைப்புக்களையும் பின்னர் மேலும் 250 இணைப்புக்களை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.

இதேபோன்று மின்சார வசதி, சுகாதார வசதி, விவசாய பிரச்சினைகளுக்க தீர்வினை பெற்றுகொடுத்தல்;, வீதிகளுக்கு கிறவல் இடல், பொது விளையாட்டு மைதானமத்தை புனரமைப்புச் செய்தல்,  சந்திவெளிக்கும் திகிலிவெட்டைக்கும் இடையில் குறுக்காக செல்லும் ஆற்றில் பயணம் செய்யும் மக்களின் நலன் கருதி ஓய்வு மண்டபம் ஒன்றினை நிர்மாணித்தல் போன்ற விடயங்களுக்கு தீர்வினை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்;கப்பட்டது.

இதேவேளை, அம்பு முனைக்குளத்தினை புனரமைப்புச் செய்வதன் மூலம்   10 ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகளில் விவாசாயம் செய்ய நடவடிக்கை எடுத்தல், பிரதேச வைத்தியசாலையில் குறைபாடாகவுள்ள கட்டிடத்தினை பூர்த்தி செய்வதுடன் கழிவகற்றல் கருவிகளை கொள்வனவு செய்தல், கிராமசேவகரை இடம்மாற்றம் செய்தல் போன்ற விடயங்களுக்கும் தீர்வு காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X